எம்எல்ஏக்களை வாங்கும் அதிமுக: ஜி.கே. மணி
சென்னை:
பாமகவில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் யற்சிகள் பலிக்காது. இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்று பாமகஎம்.எல்.ஏ. விலகல் குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாமகவின் அந்தியூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் திடீரென நேற்று கட்சியிலிருந்து விலகி, முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்த அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாமக வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.பாமக எம்.எல்.ஏ. விலகலுக்கு அதிமுகவே காரணம், இதைக் கண்டு பயந்து போய் விட மாட்டோம் என்று பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வெள்ளத்தில் கரையேற கூட்டணிக்குயாரேனும் கிடைக்க மாட்டார்களா? என்று அதிமுக வலை வீசிப் பார்த்தது.
யாரும் சிக்கவில்லை என்றதும் கூட்டணிக்கு வராத கட்சிகளிலிருந்து ஆட்களை இழுப்பது என்ற தங்களது வேலையைத்தொடங்கியிருக்கிறார்கள்.
கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக விரோதச் செயலில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.இதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமகவைச் சேர்ந்த ஓரிரு சபல புத்திக்காரர்கள் இவர்களிடம் சிக்குவதுண்டு. இப்படி ஓரிருவர்செல்வதால் கட்சியின் ஆதரவும், செல்வாக்கும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதே இல்லை என்பதை கடந்த கால தேர்தல்கள்நிரூபித்து வருகின்றன.
தன நபர்கள் விலை போகலாம், ஆனால் கட்சியின் செல்வாக்கு குறையவில்லை. மாறாக தொடர்ந்து வளர்ச்சி கண்டுதான்வருகிறது. கட்சியில் இருந்து விலகிப் போனவர்கள், அரசியலில் வாழ்விழந்து தவித்து நிற்பதையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
இப்போதும் ஒருவர் சென்று விட்டதால் பாமக எந்த வகையிலும் பாதிக்கப்படாது. செல்வாக்கு கரையாது, குறையாது. இந்தசலசலப்புகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று கூறியுள்ளார் மணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications