மேலும் 9 அகதிகள் ராமேஸ்வரம் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையில் போர் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் 9 அகதிகள் இன்று ராமேஸ்வரம் வந்தனர்.

ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத்தொடங்கியுள்ளனர். நேற்று மன்னார் பகுதியைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

அவர்களை விசாரித்த போலீஸார் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்று 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் தனுஷ்கோடிவந்தனர். அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர்அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று வந்தவர்களில் நிறை மாத கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். இலங்கையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்பகுதிகளில் ராணுவ வீரர்கள் தமிழர்களின் வீடுகளை தீவைத்து எரிப்பதாகவும், தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம்செய்வதாகவும் அகதிகள் குமுறலுடன் தெரிவித்தனர்.

ஒவ்வொரு படகுக்கும் தலா 2,000 கொடுத்து அகதிகள் தமிழகம் வந்து கொண்டிருப்பதாகவும், மேலும் பலர் தமிழகம் வரகாத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று தமிழகம் வந்த அகதிகள் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+