கையை கடிக்காத கரும்பு
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கான லாரிகளில் கரும்புகள்வந்து குவிந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்றே விலை குறைவாக இருப்பதால் மக்கள் கரும்புகளைசந்தோஷத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சனிக்கிழமை பொங்கல் திருவிழா. இதையொட்டி மஞ்சள் கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொங்கல் சம்பந்தப்பட்ட பொருட்களின்விலை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மஞ்சள் கிழங்கு விளைச்சல் பெரிய அளவில் இல்லை. காரணம், கன மழைகாரணமாக மஞ்சள் செடிகள் அழுகிப் போய் விட்டதால் மஞ்சளுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டு மஞ்சள் கிழங்கு ரூ. 80க்கு விற்கப்படுகிறது. ஆனால் தேங்காய் விலை சற்று பரவாயில்லை. தேங்காய் உற்பத்தி இந்தஆண்டு அதிகம் இருப்பதால், குறைந்த விலைக்கு தேங்காய்கள் கிடைக்கின்றன. நடுத்தர ரக தேங்காய் ரூ. 3க்கும், சற்றேபெரிதான தேங்காய் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரையிலும் கிடைக்கிறது.
பனங்கிழங்கு விற்பனையும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. ஒரு கட்டு (அதாவது 15 கிழங்கு இருக்கும்) பனங்கிழங்கு 10ரூபாய்க்குக் கிடைக்கிறது.
பூ வியாராமும் கன ஜோராக நடந்து வருகிறது. பூக்களின் விலையில் இந்த ஆண்டு பெரிய உயர்வு எதுவும் இல்லை. பொங்கல்பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்புதான் இந்த ஆண்டு எக்குத்தப்பாக வந்து குவிந்துள்ளது.
ஆயிரக்கணக்கான லாரிகளில் கரும்பு வந்து குவிந்து வருகிறது. கரும்பு இல்லாமல் பொங்கலே கிடையாது என்பதால்குடும்பத்தோடு வந்து கட்டுக் கட்டாக கரும்புகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டை விட 50 ரூபாய் குறைத்து இந்த ஆண்டு கரும்பு விற்கப்படுகிறது. 25 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ 100க்குக்கிடைக்கிறது. பெரிய கரும்பாக இருந்தால் கட்டு ரூ. 150 வரை விற்கிறது. சிறிய கரும்பாகஇருந்தால் 50 ரூபாய்க்கும்கிடைக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்துள்ள கரும்புகளை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.
பொருட்களின் விலையில் பெரிய உயர்வு இல்லாததால்,தித்திக்கும் பொங்கலை, இந்த ஆண்டு பொதுமக்கள் சந்தோஷத்துடன்கொண்டாடலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications