நெல்லை, குமரியில் மழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு
திருநெல்வேலி:
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்நல்ல மழை பெய்துள்ளது. குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது மழைக்காலம் முடிந்து குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால், தென் கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்றுமுதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நெல்லையிலும் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நேற்று சுமார் ஐந்து மணி நேரத்திற்கு பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கிக்காணப்பட்டது.
இன்றும் தென் மாவட்டங்கள் பலவற்றில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications