நர்சரிப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற காலக்கெடு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் அனுமதி பெறுவதற்கு இந்த மாதம் 31ம்தேதி கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்திற்குப் பின்னர் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்த நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. மேலும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட உத்தரவிட்டது.

அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசு விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகள் அவற்றைப் பூர்த்தி செய்ய கால அவகாசம்கொடுக்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரை இந்தக் கால கெடு பின்னர் நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் காலக்கெடுவைத் தாண்டியும் பல பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மேலும்கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி வரை இந்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய உத்தரவுப்படி, ஜனவரி 31ம் தேதிக்குள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில்விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர் பிப்ரவரி 28ம் தேதிக்குள் சரிபார்த்து ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த ஆய்வுக் குழுவினர் மார்ச் 31ம் தேதிக்குள் தங்களது ஆய்வுகளை முடித்து தொடக்கக் கல்வி அலுவலரிடம் அறிக்கைசமர்பிப்பிக்க வேண்டும். தொடக்கக் கல்வி அலுவலர் அந்த அறிக்கைகளை சரி பார்த்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் கல்வித்துறைக்குஅனுப்ப வேண்டும்.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அங்கீகாரம் வழங்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கைஅனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+