பாக்.- ஆப்கன் எல்லையில் அமெரிக்கா தாக்குதல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கிராமங்கள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியதில்,அல் கொய்தா இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் இன்னும் ரகசிய இடத்தில்பதுங்கியிருந்து செயல்பட்டு வருகின்றனர். பின் லேடன் கூட இந்தப் பகுதியில் தான் முன்பு ஒளிந்திருந்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகள் தங்களது தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளன. அவ்வப்போதுஇந்தப் பகுதியில் அமெரிக்க படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின், குணார் மாகாணத்தையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பாஜ்வார்கிராமத்துக்கு அருகே உள்ள தமோதலா என்ற இடத்தில் அல் கொய்தா அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் பதுங்கியிருப்பதாகஅமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த பகுதியில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் திடீர் தாக்குதலில் இறங்கின. இந்தக் கிராமத்தில் தலிபான்தீவிரவாதிகள் அதிக அளவில் உள்ளனர். மேலும் ஒட்டு மொத்த கிராமம் தலிபான் ஆதரவு கிராமம் ஆகும். பக்ரீத்பண்டிகைக்காக சில முக்கிய தீவிரவாதத் தலைவர்கள் இங்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்கபடைகள் தாக்குதலில் இறங்கின.
இந்தத் தாக்குதலில் பின் லேடனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவரான ஈமான் அல் ஜவாஹிரி என்ற முக்கியத் தலைவன்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தியை அமெரிக்காவோ அல்லது பாகிஸ்தானோஉறுதிப்படுத்தவில்லை.
சனிக்கிழமை அதிகாலை மூன்றரை மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க விமானப் படையின் ஆள் இல்லாவிமானங்கள் நான்கு இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. மிகவும் தாழ்வாக பறந்த அந்த விமானங்கள் கிராமத்தின் குறிப்பிட்டசில இலக்குகள் மீது சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதலில் மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்பான முழுவிவரங்களை இரு நாட்டு அரசுகளும்வெளியிடவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications