பொங்கல் சாப்பிட்ட 100 கைதிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் பொங்கல் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு இன்று பொங்கல்உணவு அளிக்கப்பட்டது. இதை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட கைதிகள், சிறைவளாகத்தில் உள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்ட 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோகப்பட்டனர்.
பழைய பச்சரிசியில் பொங்கல் செய்யப்பட்டதால் விஷத்தன்மை ஏற்பட்டு கைதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications