ஜெயாவின் தீரம்: காளிமுத்து சொன்ன கதை!
சென்னை:
கன்னட வெறியர்களிடம் சிக்கிய நிலையிலும், தமிழ் ஒழிக என்று என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று தீரத்துடன்கூறிய ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கலைவாணர்அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் ஆறு. அழகப்பன், ப.அரங்கசாமி ஆகியோருக்கு விருது, ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை சபாநாயகர் காளிமுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் காளித்து பேசுகையில் பழைய கதை ஒன்றை சொன்னார். அவர் கூறுகையில்,
அது கன்னட வெறி மேலோங்கி இருந்த நேரம். அந்த சமயத்தில், மைசூரில் ஒரு தமிழ்த் திரைப்பட படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பிரபல தமிழ் நடிகை அதில் கலந்து கொண்டு நடித்தார்.
இதை அறிந்த கன்னட வெறிக் கும்பல் அங்கு ஆயுதங்களுடன் வந்தது. தமிழ்த் திரைப்படக் குழுவினரை சூழ்ந்த அவர்கள்,கன்னடம் வாழ்க என்று சொல்லச் சொன்னார்கள். வேறு வழியில்லாததால், அனைவரும் அப்படியே கூறினர்.
தொடர்ந்து தமிழ் ஒழிக என்று சொல்லுமாறு அந்த கன்னட வெறியர்கள் கூக்குரலிட்டார்கள். இதைச் சொல்ல அனைவரும்தயங்கினர். அப்போது அந்த பிரபல நடிகை, என் உயிரே போனாலும் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று தீரமாக கூறினார்.
அந்த துணிச்சல் மிக்க, தமிழ் உணர்வு கொண்ட நடிகைதான் இன்று தமிழகத்தை ஆண்டு வரும் நமது முதல்வர் ஜெயலலிதா.அவரது தலைமையில் தமிழக அரசு செயல்படுவது நமக்கெல்லாம் பெருமையாகும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்குஅனுப்பியுள்ளார் ஜெயலலிதா. உலகத்தின் மிகச் சிறந்த அறநூல் திருக்குறள். வீட்டில் உப்பு, தீப்பெட்டி இருப்பதைப் போலதிருக்குறளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது தமிழர்களின் கடமையாகும்.
வள்ளுவர் கனவு கண்ட, பசி, பிணியற்ற நாட்டை உருவாக்க ஜெயலலிதா பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது தலைமையில்வள்ளுவரின் கனவு விரைவில் நனவாகும் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications