விஷச் சாராயம்- ஒருவர் பலி; 5 பேர் சீரியஸ்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் பிடாரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலியானார். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிடாரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பொங்கலையொட்டி ஜாலிக்காக கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் அண்ணாமலைஎன்பவர் சாராயம் குடித்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எத்தனை பேர்சாராயம் குடித்தனர், யாரிடமிருந்து சாராயம் பெற்றனர் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications