அரசு தொட்டில்: 15 நாளில் 14 பெண் சிசுக்கள்
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள அரசுத் தொட்டிலில், கடந்த 15 நாட்களில் 14 பெண் குழந்தைகள் விடப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக அரசு பொது மருத்துவமனையில் அரசு சார்பில் தொட்டில்வைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள், தங்களது குழந்தைகளை இங்கு விட்டுச் செல்லலாம் என மாவட்டநிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த அரசுத் தொட்டிலில் ஏராளமான குழந்தைகள் இதுவரை போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதிமுதல் 15ம் தேதி வரையிலான 15 நாட்களில் மொத்தம் 14 பெண் சிசுக்கள் போடப்பட்டுள்ளனர்.
இதுவரை குறுகிய நாட்களில் இவ்வளவு அதிகமாக குழந்தைகள் விடப்பட்டதில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த மருத்துவமனையில் தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அந்த ஆண்டு 158 பெண் குழந்தைகள் இங்கு விடப்பட்டனர். 2003ம் ஆண்டு அதிகபட்சமாக 207 குழந்தைகள் தொட்டிலில்விடப்பட்டனர். 2004ம் ஆண்டு 157 குழந்தைகளும், 2005ம் ஆண்டு 178 குழந்தைகளும் அரசுத் தொட்டிலில் விடப்பட்டனர்.
இதுவரை அரசுத் தொட்டிலில் மொத்தம் 713 குழந்தைகள் விடப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் ஆண் குழந்தைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications