பெரம்பலூர்: காலராவுக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் காலராவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் ஐயன்பேரையூர் என்ற கிராமத்தில் பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள்பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு காலரா ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேகவர்ணம், பெருமாள், கோமதி என்ற 12 வயது சிறுமிஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவம் நடந்த கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு காலராத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications