அழுக்கு மஞ்சள் பையும் கருணாநிதியும்- அதிமுக எம்எல்ஏ பேச்சு: சட்டசபையில் அமளி-வெளிநடப்பு
சென்னை:
அழுக்கு மஞ்சள் பையை அக்குளில் திணித்துக் கொண்டு, திருவாரூரில் இருந்து தனியாக வந்தவர், இன்று பில் கேட்ஸ்சுக்கேகடன் கொடுப்பதாக கொக்கரிப்பது எப்படி? என்று திமுக தலைவர் கருணாநிதியை மிகக் கடுமையாகத் தாக்கி அதிமுக எம்எல்ஏசேகர்பாபு சட்டசபையில் பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தபோது அதிமுக எம்எல்ஏ சேகர் பாபுபேசியதாவது:நான்கு ஆண்டுக்கு முன்பு தமிழகம் மாலுமி இல்லாத கப்பலாக இருந்தது. 2001ம் ஆண்டு தேர்தலில் அம்மாவை மக்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய பிறகு தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது.
40 ஆண்டு சாதனைகளை 4 ஆண்டுகளில் புரட்சித் தலைவி செய்துள்ளார். மருத்துவ துறையில் இந்தியாவிற்கே தலைநகராகசென்னை மாறி உள்ளது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் வேரொடு வீழ்த்தப்பட்டுள்ளனர். வீரப்பன்அழிக்கப்பட்டுள்ளான்.
பெண்கள் நிலை உயர்ந்துள்ளது. முதலமைச்சரின் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தால் கிராம பொருளாதாரத்தில் புரட்சிஏற்பட்டுள்ளது. ஆண்களை சார்ந்து வாழ்ந்த பெண்கள் தற்போது ஆண்களுக்கே வாழ்க்கை தருவோம் என்று சொல்லும்அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர்.
அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவரது கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டனர். ஆனால் புரட்சித்தலைவி முதலமைச்சர் அம்மா அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றும் திராவிட இயக்கத்தின் உண்மையானவாரிசாக திகழ்கிறார்.
பொறாமை குணம் உடையவர்களால் இதை தாங்க முடியவில்லை. நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். தமிழ் நாட்டில் வெள்ளநிவாரணத்துக்கு ரூ. 13,680 கோடி நிதி மற்றும் அரிசி மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசை முதலமைச்சர் வற்புறுத்தினார்.ஆனால் 1,000 கோடி தான் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் சார்பில் 39 எம்பிகள் உள்ளனர். அவர்களில் 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டுக்குவெள்ள நிவாரண நிதி கிடைக்க என்ன செய்தார்கள்?
அழுக்கு மஞ்சள் பையை அக்குளில் திணித்துக் கொண்டு திருவாரூரில் இருந்து தனியாக வந்தவர், இன்று பில் கேட்ஸ்சுக்கே கடன்கொடுப்பதாக கொக்கரிப்பது எப்படி? அவர்கள் குடும்பத்தினர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். (அப்போது திமுகஎம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு அதிமுகவினர் சத்தமிட பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நீங்கள் ஆயிரம் கூட்டணி சேர்த்தாலும் வரும் தேர்தலில் மக்கள் விரட்டுவார்கள். தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி அமைத்தஅம்மா மீண்டும் முதல் ஆவார் என்று பேசினார் சேகர் பாபு.
இதையடுத்து எழுந்த திமுகவினர் சேகர் பாபுவின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரினர். ஆனால் அதை நிராகரித்தசபாநாயகர் காளிமுத்து திமுக உறுப்பினர் ஜே. அன்பழகனை பேசுமாறு கூறினார்.
அன்பழகன் பேசுகையில், சேகர்பாபுவின் புகாரை மறுத்துப் பேசினார். கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்கு அவர் பேசினார். அவர்பேசிய பின்னர், அவரது பேச்சு முழுவதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். (இதனால் அவரதுபேச்சை யாரும் வெளியிட முடியாது). இதையடுத்து திமுகவினர் கொந்தளித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அன்பழகன் மேலும் 5 நிமிடங்களுக்குப் பேச அனுமதிக்குமாறு சபாநாயகரைகேட்டுக் கொண்டார். அதன்படி சபாநாயகர் காளிமுத்துவும் 5 நிமிடங்கள் பேசுமாறு அன்பழகனை கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர் பேசியது அவைக் குறிப்பில் ஏறுகிறது, ஆனால் அதைமறுத்து திமுக உறுப்பினர் அன்பழகன் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதா என்று எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.
எம்எல்ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை:
முன்னதாக இந்த சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடரில் திமுக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அக்கட்சிஎம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினையை, எப்படி கையாள வேண்டும்,எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து கருணாநிதி ஆலோசனை வழங்கினார்.
இதில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications