ஹஜ்: பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 56 ஆனது

Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஹஜ் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்தியர் ஐந்து பேர் மரணமடைந்தனர்.இதையடுத்து, ஹஜ் நெரிசலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவில் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்ச்சியான சாத்தான் மீது கல்லெறிதல் விழா நடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 51 இந்தியர்கள் உட்பட 363 ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர். ஏராளமானோர்படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 இந்தியர்கள் மரணமடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்த இந்தியர்கள்எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை இந்திய துணைத் தூதர் யூசுப் சயீது தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 363 பேர்களில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, சீனா, ஈரான், ஈராக் உட்பட பல்வேறுநாடுகளைச் சேர்ந்த 213 பேர் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்அதிக அளவில் 24 பேர் உயிர் இழந்தனர்.

அதே நேரத்தில், ஹஜ் யாத்திரை வந்திருந்த இந்திய பயணிகள் இந்தியாவுக்கு திரும்பத் தொடங்கி விட்டனர். நேற்று ஏர்-இந்தியாமற்றும் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒன்பது விமானங்கள் 2500 பயணிகளுடன் இந்தியாவுக்கு புறப்பட்டன.

அந்த விமானங்கள் ஸ்ரீநகர், புதுடில்லி, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத், ஜெய்ப்பூர், கோல்கட்டா மற்றும் கோழிக்கோடு ஆகியநகரங்களுக்கு சென்றடையும் என்று தெரிவித்தார்.

ஹஜ் பயணிகள் தமிழகம் திரும்பினர்:

தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் ஒரு குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.

தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு 3,815 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர். இவர்களுக்கு தமிழக அரசு ரூ. 36 லட்சம்நிதியுதவியை அளித்திருந்தது. ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் இன்று முதல் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். முதல்குழு இன்று காலை சென்னை திரும்பியது.

அக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை அமைச்சர் அண்ணாவி, மாநில ஹஜ் கமிட்டி தலைவர் சையத் கான் ஆகியோர் மாலைஅணிவித்து வரவேற்றனர்.

இன்று முதல் 29ம் தேதி வரை 13 விமானங்களில் தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+