அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுகள் முட்டியதில் ஒருவர் இறந்தார்.

பொங்கல் திருநாளின் நிறைவாக அலங்காநல்லூரில் பிரபலமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன.

ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்தனர். அலங்காநல்லூர் மந்தை பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.முதலில் கோவில் மாடு திறந்து விடப்பட்டது. இதை யாரும் பிடிக்கவில்லை.

பின்னர் ஒவ்வொரு ஊர் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இந்தக் காளைகளை வீர மறவர்கள் பாய்ந்து பிடிக்க முயற்சித்தனர்.மிகவும் ஆக்ரோஷமாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் பல காளைகள் யாரிடமும் பிடிபடாமல் திமிறி ஓடிய காட்சிமயிர்க்கூச்செறிவதாக இருந்தது.

காளைகளை அடக்க முயன்ற பல இளைஞர்கள் மாடுகளால் தூக்கி வீசப்பட்டன. இதில் துரை என்பவர் பலத்த காயமடைந்துஇறந்து போனார். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இலங்கை அமைச்சர் செளமியா தொண்டமான் உள்ளிட்ட பல பிரபலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். மதுரையைச் சுற்றிலும் நடந்த பல்வேறு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மொத்தம்5 பேர் மாடுகள் முட்டி இறந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+