கிருஷ்ணசாமிக்கு ஜாமீன் கிடைக்குமா?
டெல்லி:
கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்குசுப்ரீம் கோர்ட் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை, பல்லாவரம் அடுத்த திரிசூலம் மலையில் கல் குவாரி ஏலம் எடுப்பது தொடர்பாக கிருஷ்ணசாமியின் ஆதரவாளரானகருப்பசாமி கோஷ்டிக்கும், இந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி துவக்கிய தங்கபாண்டியன் ஆதரவாளரானஅன்னை வேளாங்கண்ணி கோஷ்டிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதலில் தங்கபாண்டியன் கோஷ்டியைச்சேர்ந்த மாடசாமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்எட்டாவது நபராக கிருஷ்ணசாமி சேர்க்கப்பட்டார். இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில்கிருஷ்ணசாமி மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.அதுவரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி தரப்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.
இம்மனுவை நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.பி.நவ்லேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. மனுவுக்கு மூன்றுவாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மனு மீதான விசாரணைமுடியும் வரை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.












Click it and Unblock the Notifications