நெல்லையில் கன மழை: தாமிரபரணியில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டத்தில் திடீரென பெய்து வரும் கன மழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த புயல் சின்னங்கள் காரணமாக, வட மாவட்டங்களை நொறுக்கித் தள்ளிய கன மழைதற்போது முழுமையாக ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் அரபிக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மற்றும்நெல்லை மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.

பலத்த இடியுடன் கூடிய கன மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாபனாசம் அணைவேகமாக நிரம்பி வருவதால் அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+