இலங்கையிலிருந்து மேலும் 5 அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
தனுஷ்கோடி:
ராமேஸ்வரத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் மேலும் 5 பேர் இன்று தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.வட கிழக்கு இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த சனிக்கிழமை 5 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 37 பேராகஅகதிகள் எண்ணிக்கை உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் 5 அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications