தேர்தல் பிரச்சாரம்: சென்னை வருகிறார் சோனியா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் செய்ய மார்ச் மாதம் தமிழகம் வருகிறார் சோனியா காந்தி.வரும் மே மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக மாபெரும் பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரத்தை தொடங்ககாங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைத்துள்ளனர். அவரும்வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கருணாநிதி, ராமதாஸ், வைகோ ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்றுகாங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். சோனியாவின் வருகை உறுதியாகிவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளை மூத்ததலைவர்கள் செய்ய தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்க தமிழகத்துக்கான காங்கிரஸ்பொறுப்பாளர் வீரப்ப மொய்லி வரும் 25ம் தேதி சென்னை வருகிறார்.












Click it and Unblock the Notifications