டெல்லி குண்டு வெடிப்பு: தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
கடந்த தீபாவளியன்று டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த லஷ்கர்-ஏ-தொய்பாஇயக்கத்தின் முக்கிய தீவிரவாதியை காஷ்மீர் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
டெல்லியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம் தேதி தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிஒருவனை போலீசார் தேடி வந்தனர்.தேடப்பட்டு வந்த தீவிரவாதி காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி ராஜேந்திர குமார் கூறுகையில்,டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த இரண்டுதீவிரவாதிகளில், அப்துல்லா பாய் என்கிற அபு ஹுசாபியா என்ற தீவிரவாதி ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டான்.
குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபு சர் என்ற இரண்டாவது தீவிரவாதியை தேடி வந்தோம். அபு சர் பாரமுல்லா மாவட்டத்தில்பதுங்கியிருப்பதாக டெல்லி போலீஸ் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினோம். பாரமுல்லாவில் அபு சர் சுற்றி வளைக்கப்பட்டான். அப்போது அவன்தப்ப முயன்று போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். பாதுகாப்பிற்காக போலீசார் திருப்பி சுட்டதில் அபு சர் உயிரிழந்தான்என்றார்.












Click it and Unblock the Notifications