மதுபான தொழிற்சாலையில் சசிக்கு பங்கில்லை: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீதும், தனது தோழி சசிகலா மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய திமுகதலைவர் கருணாநிதி மீது தனிப்பட்ட முறையிலும், அரசின் சார்பிலும் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கும், எனக்கும் மக்களிடையே கிடைத்து வரும்நற்பெயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில், மத்திய அரசை நிர்ப்பந்தித்து தமிழகத்திற்குஎந்தவித நிதியுதவியும், திட்ட உதவிகளும் கிடைக்கச் செய்யாமல் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மும்முரமாகசெயல்பட்டு வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், எனது குடும்ப டாக்டர் மற்றும் ஆடிட்டரின்வீடுகளில் சோதனை என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயேஇந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த உண்மை நிலையை நான் வெட்டவெளிச்சமாக்கி, அவர்களது முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டதால்,ஆத்திரமடைந்த கருணாநிதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுக்கூட்டம் என்ற பெயரில் என் மீது பொய்யான அவதூறுத்தகவல்களை அள்ளி வீசிப் பேசியுள்ளார்.

எனக்கும், எனது தோழி சசிகலாவுக்கும் சொந்தமான மதுபானத் தொழிற்சாலையில் வருமான வரி சோதனை நடந்ததாகவும்,அந்த தொழிற்சாலையுடன் தொடர்பு கொண்டதால் எனது குடும்ப டாக்டர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனைநடைபெற்றதாகவும் கருணாநிதி விளக்கமளிக்கிறார்.

எனக்கோ, சசிகலாவுக்கோ சம்பந்தப்பட்ட மதுபானத் தொழிற்சாலையில் எந்தவிதமான பங்கும் இல்லை. எவ்விதத் தொடர்பும்இல்லை. எனது நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற கெடுமதியுடன் இவ்வாறு அவதூறாகப் பேசியுள்ளார் கருணாநிதி.

அவரது பேச்சுக்காக என் சார்பில் தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பிரதமருக்கு ஜெ. கடிதம்:

இதற்கிடையே சிங்கப்பூர் சிறையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி, அவரதுகுடும்பத்தினருக்கு அந் நாட்டு அரசிடமிருந்து உரிய நிதியுதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பரமசிவம், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலைக்காகசென்றார். சென்ற இடத்தில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அவர் தொலைத்து விடடார்.

இதையடுத்து பரமசிவத்தை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரமசிவம் கடந்த 6ம் தேதிமர்மமான முறையில் இறந்து விட்டார். அவர் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியாமல் அவரது குடும்பத்தினரும்,கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பரமசிவத்தின் மர்ம மரணம் குறித்து இந்தியத் தூதரகம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். இறந்த பரமசிவம் மிகவும் குறைந்தவயதுடையவர் என்பதால் அவரது குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் அரசு நிதியுதவி செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+