நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
நாகப்பட்டனம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள்தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.கோடியக்கரை பகுதியில் முனியன், மோகன சுந்தரம், ராஜேந்திரன், சோமசுந்தரம்ஆகிய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்து தமிழக மீனவர்களைதுப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், முரட்டுக் கயிற்றால் தாக்கியும் அட்டூழியம்செய்தனர்.
இந்தத் தாக்குதலில் ராஜேந்திரன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். மற்ற மீனவர்கள்லேசான காயத்துடன் தப்பினர். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications