ரூ. 2 கோடி ஏப்பம்: கர்நாடக அதிமுக செயலாளர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி ரூ. 2 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர மாநில போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்து வருபவர் வா.புகழேந்தி. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர்.மகாராஷ்டிராவைச் சேர்ந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவி விற்பனை மையம் ஒன்றை அணுகிய இவர், பெங்களூரில் நிறுவனத்திற்குடீலர்கள் பிடித்து தருவதாக கூறி ரூ. 2 கோடி வரை கமிஷனாக பெற்றுள்ளார்.

தனக்கு தமிழக அரசில் பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கூறி தமிழகத்திலும் சில ஆர்டர்கள் பிடித்துத் தருவதாகஉறுதியளித்துள்ளார்.

ஆனால் கமிஷன் பணத்தை வாங்கிக் கொண்டு எந்தவித ஆர்டரையும் பெற்றுத் தராமல் கம்பி நீட்டியுள்ளார் புகழேந்தி.இதையடுத்து மகாராஷ்டிர நிறுவனம் அம் மாநில நீதிமன்றத்தை அணுகியது. புகழேந்தியைக் கைது செய்ய மகாராஷ்டிர கோர்ட்வாரண்ட் பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து புகழேந்தி தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க மகாராஷ்டிரத்திலிருந்து போலீஸ் படை பெங்களூர்வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்த வேட்டையில் புகழேந்தி சிக்கினார். அவரை சித்தாபுரா காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர் நீதிமன்றத்தில் புகழேந்தியை ஆஜர்படுத்திய பின்னர் மகாராஷ்டிரத்திற்குக் கொண்டு செல்ல போலீஸார் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+