9 அகதிகள் வருகை: புதுவையில் அகதி கொலை

Subscribe to Oneindia Tamil

தனுஷ்கோடி:

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு இன்று (வியாழக்கிழமை) மேலும் 9 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கையில் உள் நாட்டுப் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருந்து தமிழர்கள் உயிர் தப்பி தமிழகம்வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 12ம் தேதி முதல் இவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதுவரை 76க்கும் மேற்பட்டோர்அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும், மன்னார் பகுதியில் இருந்து 3 குடும்பத்தைச் சார்ந்த 9 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இவர்கள் மண்டபம்அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதி படுகொலை

இதற்கிடையே பாண்டிச்சேரி அருகே காலாப்பட்டு முகாமில் இலங்கை அகதி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிபடுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலாப்பட்டு அகதிகள் முகாமில் நேசன் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் தங்கியிருந்தார். நேற்று இரவு நேசனின்வீட்டுக்குள் புகுந்த சிலர், அவரை சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் நேசன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்பலியானார்.

நேசனின் மனைவி கவிதாவுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். நேசன் கொல்லப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+