விஜய்காந்த், கார்த்திக்குடன் கூட்டணிக்கு முயலும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த்தின் தே.மு.தி.க மற்றும் கார்த்திக் தலைமை தாங்கும் பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிஅமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் படு மும்முரமாக உள்ளன. திமுக தனதுகூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியே போய் விடாமல் தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. முடிந்தால் வேறு சில கட்சிகளையும்உள்ளே இழுக்கவும் முயன்று வருகிறது.

அதிமுகவைப் பொருத்தவரை தனியே.. தன்னந்தனியே என்று தேர்தலை படு தெம்பாக சந்திக்கத் தயாராகி வருகிறது. பாமக,காங்கிரசுக்கு தூது அனுப்பி அனுப்பி ஓய்ந்து போய்விட்ட அதிமுக அந்தக் கட்சியை உடைக்கும் வேலையில் கவனம் செலுத்தஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் பாஜகவின் நிலைதான் படு மோசமாக உள்ளது. யாரும் அவர்களைக் கூப்பிடுவது போலத் தெரியவில்லை.அவர்களும் யாருடன் கூட்டணி சேருவது என்ற வழி தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். கடைசி கட்டத்தில் அதிமுகவுடன்போய் சேர்ந்து கொண்டு 2,3 சீட் வாங்கலாம் என்பது அக் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

அதே நேரத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜயகாந்த், திடீர் தலைவராகிவிட்ட கார்த்திக் ஆகியோருடன் கூட்டணி சேரபாஜகவில் இன்னொரு பிரிவினர் முயற்சித்து வருகின்றனர். இவர்களைக் கொண்டு 3வது அணியை உருவாக்க பாஜகதிட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறுகையில், விஜயகாந்த் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார்.அவரது கட்சி திராவிடக் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி போலவே இருக்கிறது. அதன் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பார்வர்ட் பிளாக் கட்சியாக இப்போதுதான் பதவியேற்றுள்ளார் கார்த்திக். அவரது கட்சி தேசியக் கட்சியாகும். அக்கட்சியின்கொள்கையும் எங்களது கொள்கையும் ஒன்றாகவே இருந்தாலும் அக்கட்சியின் தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதுஎன்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இருப்பினும்கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூற முடியாது. அதுதொடர்பான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படும்.

எங்களைப் பொருத்தவரை அதிமுக எங்களுக்கு விரோதி அல்ல (இங்க தான் முக்கியமான பாயிண்ட்). திமுக தலைமையிலானகூட்டணிதான் எங்களது பொது எதிரி. அந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது. அதற்கேற்ற வகையில் கூட்டணியைஅமைப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+