போலீசிடம் இருந்து அதிமுக விஐபி எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மகாராஷ்டிர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநலஅதிமுக செயலாளர் வா.புகழேந்தி, போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டார். இவரைப் பிடிக்க இரு மாநில போலீஸாரும் தீவிரநடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி தயாரிப்பு நிறுவன அதிபரிடம் ரூ. 2 கோடி வரை மோசடிசெய்தார் புகழேந்தி. இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர்.

தனது பிறந்த நாள், தனது குடும்பத்தில் யாருக்காவது பிறந்த நாள், குடும்பத்தில் விஷேசம் என்றால் உடனே முதல்வரைசென்னையில் வந்து குடும்பத்தோடு சந்திப்பார் புகழேந்தி.

தமிழக அரசிலும் கர்நாடக அரசிலும் தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பல அரசுத் திட்டங்களை வாங்கிக் தருவதாகக்கூறித்தான் மகாராஷ்டிர நிறுவனத்திடம் ரூ. 2 கோடியை ஸ்வாஹா செய்தார் புகழேந்தி.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புகழேந்தியை புனேவிலிருந்து வந்த தனிப்படை போலீஸார் நேற்று பெங்களூரில்வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புகழேந்தி பெங்களூர் சித்தாபுரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் புனே போலீஸாரும், கர்நாடக போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்து இரு மாநில போலீஸாரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது புகழேந்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

போலீஸ் பிடியில் இருந்து புகழேந்தி கிரிமினல்தனமான தப்பியோடியது இரு மாநில போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்து.

இதையடுத்து அவரைப் பிடிக்க பெங்களூர் மற்றும் புனே போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரூ. 2 கோடி ஏப்பம்: கர்நாடக அதிமுக செயலாளர் கைது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+