பரத முனிக்கு கோவில் கட்ட 5 ஏக்கர் நிலம்!
சென்னை:
பரத நாட்டியத்தைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு கோவில் கட்டுவதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசுவது கண்டனத்துக்குரியது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதானவிவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா,நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காக்க வேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் தோன்றி உலகெங்கும்பரவியுள்ள பரத நாட்டியக் கலையை உலகமே வியந்து போற்றுகிறது.
அந்தக் கலையைத் தோற்றுவித்த பரத முனிக்கு, இந்தோனேசியாவில கோவில் உள்ளது. ஆனால் அந்த முனிவர் தோன்றியதமிழகத்தில் கோவில் இல்லை. இதுகுறித்து பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் எனது கவனத்திற்குக்கொண்டு வந்தார்.
இதையடுத்து பரதமுனிவருக்குக் கோவில் கட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது.
அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் எஸ்.ஆர்.பி போன்றவர்கள் கொச்சைப்படுத்தி, இழிவாகப்பேசுவது துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது என்றார் ஜெயலலிதா.
அப்படியே தமிழர்களின் போற்றுதலுக்குரிய கண்ணகி சிலையையும் மறுபடி கொண்டு வந்து வச்சுருங்கோ...












Click it and Unblock the Notifications