சென்னை சிபிஐ அலுவலகத்தில் தீ-பைல்கள் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ராஜாஜி பவன் வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல முக்கியவழக்குகளின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன் மத்திய அரசு அலுவலக வளாகத்தின் 3வது மாடியில் சிபிஐ அலுவலகம் உள்ளது. இந்தஅலுவலகத்தில் நேற்று மாலை திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது.உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீஅணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான கம்ப்யூட்டர்கள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு முக்கியவழக்குகளின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் எரிந்து போனதாலும், கம்ப்யூட்டர்கள் எரிந்து போனதாலும் அதில் பதிவு செய்துவைக்கப்பட்டிருந்த பல முக்கியத் தகவல்கள் அழிந்து போயுள்ளதாலும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது சதிச் செயலா அல்லது மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications