புல்டோசர் மோதி இடிந்த சென்னை துறைமுக சுவர்: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை துறைமுகம் அருகில் புல்டோசர் மோதி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உடல் நசுங்கி செத்தனர். மேலும் 2 பேர்படுகாயமடைந்தனர்.

சென்னை துறைமுகத்தின் சுற்றுச்சுவர் ஓரமாக உள்ள அன்னை சத்யா நகரில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் துறைமுக வளாகத்தில் ஒரு புல்டோசர் எந்திரம் திரும்பிய போது சுற்றுச் சுவர் மீது மோதியது.

இதனால் சுமார் 25 அடி நீளத்துக்கு சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. சம்பவத்தின்போது குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஏழுமலை (வயது 45), ராமு (வயது 19) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாகசெத்தனர்.

இந்த தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும்இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரியா (வயது 16), கஸ்தூரி (வயது 30) ஆகிய இருவரையும் மீட்புகுழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் துணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், கவனக்குறைவாக புல்டோசரை இயக்கியடிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+