ஜெயாவின் டாக்டர், ஆடிட்டர் வீடுகளில் இன்றும் ரெய்ட்?: லாக்கர்களுக்கு சீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டர் பாஸ்கர் மற்றும் ஆடிட்டர் நடராஜன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்றும்வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகத் என்று தெரிகிறது.

படப்பையில் உள்ள மிடாஸ் கோல்டன் புரூவரீஸ் மதுபான தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில்முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டர் பாஸ்கர் மற்றும் ஆடிட்டர் நடராஜன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் தொடர்ந்துவருமானவரித் துறை அதிகாரிகள் "ரெய்ட் நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில்

இந்த மதுபான நிறுவனம் சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும், இதிலிருந்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்ஒயின் ஷாப்களுக்கும் கட்டாயமாக மதுபானம் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் இந்த ரெய்டே சசிகலாவை குறி வைத்தே நடப்பதாகத் தெரிகிறது. இந் நிலையில் இந்த ரெய்டுகளைஒருங்கிணைக்கவும், வருமான வரி ஏய்ப்புகளை கணக்கிட முழு விசாரணை நடத்தவும் டெல்லியிலிருந்து வருமான வரித்துறைஉயர் அதிகாரியான பென்ட்சி சென்னை வந்துள்ளார்.

அவரது தலைமையில் வருமானவரித் துறை இன்ஸ்பெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். விசாரணை மேலும் பல்வேறு கோணங்களிலும்முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை நகரில் மட்டும் வருமானவரித் துறை அதிகாரிகள் 50 பேர் நான்கு பிரிவாகப் பிரிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் உள்ள வங்கி லாக்கர்கள் உடைக்கப்பட்டதாகத்தெரிய வந்துள்ளது. இந்த வங்கிகளில் டாக்டர் பாஸ்கர் மற்றும் ஆடிட்டர் நடராஜனுக்கு கணக்குகள் உள்ளதாகவும் தெரிகிறது.

சீல் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் மதிப்பு பல கோடி ரூபாயைத் தாண்டும் என்று கூறுகின்றனர். இவர்களது சொத்துக்கள்,முதலீடுகள் குறித்தும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3வது நாளாக இன்றும் ரெய்டு தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+