ஜெயேந்திரர்: வழக்கை இடம் மாற்ற கோரிய மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.

இது தொடர்பாக பாண்டிசேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில்,

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை பாண்டிச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது. கடந்த நவம்பர் மாதம்28ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பார்க்க கூட நீதிபதியால் முடியவில்லை.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் பொது மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அசெளகரியம் ஏற்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வழக்குவிசாரணை நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்.

பொது மக்கள் எளிதில் வராத வகையில் தொலைவில் அந்த இடம் இருக்க வேண்டும்.எனவே தற்போது இருக்கும் இடத்தைவிட்டு புதுச்சேரிக்குள் வேறு இடத்தில் இந்த வழக்கு விசாரணையை வைத்துக் கொள்ளுமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரப ாஸ்ரீதேவன் ஆகியோர் இந்த வழக்கினால் நீதிமன்றத்திற்குவழக்கறிஞர்கள் வருவதற்கோ, பொது மக்களுக்கோ எந்த அசெளகரியமும் இல்லை.

புதுச்சேரியில் உள்ள முதன்மை நீதிபதி மற்றும் நீதித்துறை சிறப்பு அதிகாரி அளித்த இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தமனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+