உடை-செல்போன்: கலாமுக்கு மாணவர்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவியருக்கு விதித்துள்ள உடைக் கட்டுப்பாடு, செல்போன் தடை ஆகியவற்றைஉடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மாணவ, மாணவியர்கள் கடிதம்எழுதியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்கள் டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட் போன்ற உடைகள் அணிவதற்கும்,செல்போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல்கல்லூரிகளிலும் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு மாணவ, மாணவியர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், கலாமுக்கு நீண்ட கடிதம் ஒன்றைஅனுப்பியுள்ளனர்.

அக் கடிதத்தில், மாணவ, மாணவியராகிய நாங்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க முடியும்.என்ன உடை அணிந்தால் நாகரீகமாக இருக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையைக் கூறி மாணவ, மாணவியர்களை பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கேலிசெய்கிறார்கள். மாணவ, மாணவியர் கூட்டமாக செல்லக் கூடாது என்று பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள ஊழியர்கள்மிரட்டுகிறார்கள்.

செல்போனில் பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா? செல்போனை பிடுங்கிச் செல்வதை மிகவும் அநாகரீகமான,அவமானகரமான செயலாக நாங்கள் கருதுகிறோம். இது மாணவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

மாணவ, மாணவியரிடம் இத்தனை கெடுபிடியாக நடக்கும் பல்கலைக்கழக, பொறியியல் கல்லூரி நிர்வாகம், முதலில்அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவ, மாணவியரின் நலன் கருதி, சிண்டிகேட் எடுத்த முடிவு இது என்று துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகிறார். ஆனால்,சிண்டிகேட்டில் மாணவர்களின் பிரதிநிதி யாரும் இல்லை. இதை மாற்றி மாணவர்கள் தரப்பு கருத்துக்களையும் அறியமாணவர்களின் பிரதிநிதி ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க வேண்டும்.

மாணவ, மாணவியரின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட வேண்டும் என்று மாணவ,மாணவியர்கள் தங்களது கடிதத்தில் கோரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+