காஷ்மீர்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 50 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் தர்ஹல் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. சாய் காஜ் என்ற வழிபாட்டுத் தலத்துக்குஅருகே சென்று கொண்டிருந்த பஸ் சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தில் விழுந்தது.
மலைப் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பஸ் உடைந்து சுக்குநூறாக சிதறியது. இதில் 50 பயணிகள் உயிரிழந்தனர். 15 பேர்காயமடைந்ததுள்ளனர்.
தர்ஹலில் இருந்து ரஜெளரிக்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் மிக ஆழமான பள்ளத்தில் விழுந்ததால் இறந்தவர்களின்உடல்களை மீட்கவே 4 மணி நேரம் பிடித்தது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications