மதுரை- சிங்கப்பூர், மலேசியா விமான சேவை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதுரையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவுகள், கொழும்பு ஆகிய இடங்களுக்கு விரைவில் விமான சேவைதொடங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்ச பிரபுல் படேல் உறுதியளித்துள்ளார்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான மொகன் டெல்லியில் அமைச்சர் பிரபுல் படேலை சந்தித்துமதுரையிலிருந்து அதிக அளவில் விமான சேவைகளை இந்தியன் (முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ்) நிறுவனம் இயக்க வேண்டும்என்று கோரி மனு கொடுத்தார்.

அந்த மனுவில் தென் மாவட்டங்களின் தலைநகர் போல மதுரை செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்தலட்சக்கணக்கான மக்கள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கிறார்கள்.

குறிப்பாக தேவகோட்டை, கீழக்கரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்வெளிநாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டும் என்றால் சென்னைக்குப் போய் அங்கிருந்துவிமானம், ரயில், பஸ் மூலம் மதுரை வந்து பின்னர்தான் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும்.

சென்னை வழியாக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அதிக பொருட் செலவும், பயண நேரமும் வீணாகிறது.இதைத் தவிர்க்க மதுரையிலிருந்து மேற்கண்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமான போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த பிரபுல் படேல், தற்போது மதுரை விமான நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் ரூ. 36 கோடிமதிப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய முனையம் ஒன்றும் அமைக்கப்பட்டுவருகிறது.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கூடுதல் விமானங்களை இந்தியன் நிறுவனம் இயக்கும். இந்தியன் நிறுவனத்திற்காகவாங்கப்பட்டுள்ள புதிய விமானங்கள் இந்தப் பிராந்தியத்தில் இயக்கப்படும்.

கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா, மாலத் தீவுகள் ஆகிய இடங்களுக்கு மதுரையிலிருந்து நேரடி விமான சேவை இயக்கப்படும்என்று உறுதியளித்தார்.

தற்போது மதுரையிலிருந்து சென்னைக்கு மட்டுமே விமான சேவை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியன்,ஏர் டெக்கான் நிறுவனங்கள் தினசரி தலா ஒரே ஒரு விமானத்தையும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தினசரி 2 விமானங்களையும்இயக்கி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+