தமிழக போலீசுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

எதிர்க் கட்சியினர் மீது பொய் வழக்கு போடும் நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழக அரசுக்கு எதிரான கூட்டத்தில் ரகுபதி பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வரும் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சிக்கு இன்னும் 70 நாட்களே பாக்கிஉள்ளது.

மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த 12 அமைச்சர்களால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றுஜெயலலிதா கூறுகிறார். எங்கள் 12 பேருடைய செயல்பாடுதான் தற்போது அவரை ஆட்டம் காண வைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலலிதாவிற்கு பெட்டி தூக்குகின்ற கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர் கட்சியினர் மீதுபொய் வழக்கு போட்டுவரும் நடவடிக்கைகளை அவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் இதன் பின் விளைவுகளைஅவர்கள் நிச்சயமாக சந்திக்க வேண்டிவரும். இதை அவர்கள் புரிந்து கொண்டு முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்ரகுபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+