அதிமுக-விஜயகாந்த் கூட்டணி அமைத்தால் திமுக அம்பேல்!: கருத்துக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக சென்னை லயோலாகல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதிமுகவும், விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து வருகிற சட்டசபைத் தேர்தலில்போட்டியிட்டால் திமுக கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக அரசு குறித்த மக்களின் கருத்துக்களை கணிக்க லயோலா கல்லூரியின்தகவல் மற்றும் இதழியல் துறை மற்றும் ஊடகவியல் துறை மாணவர்கள் ஆய்வு நடத்தினர்.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை லயோலா கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை இன்று செய்தியாளர்களிடம்வெளியிட்டார். கருத்துக் கணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் கூறுகையில்,

மாணவ, மாணவியர் பல்வேரு குழுக்களாக மாநிலம் முழுவதும் பிரிந்து சென்று 2 கட்டங்களாக கருத்துக் கணிப்பை நடத்தினர்.கடந்த நவம்பர் மாதம் முதலாவது கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. பின்னர் ஜனவரி மாதம் (இந்த மாதம்) 2வது கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த இரு கருத்துக் கணிப்புகளிலும் தெரிய வந்துள்ள விவரங்கள்:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

69.4 சதவீத மக்கள் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சியும், திருப்தியும் வெளியிட்டுள்ளனர். மக்களின்அத்தியாவசிய தேவைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் திருப்திகரமான வகையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக 48.1 சதவீதம் பேர்கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று ஓட்டுப்பதிவு நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு, திமுகவுக்கு 38.4 சதவீதம் பேரும், 33.7 சதவீதம் பேர்அதிமுகவுக்கு என்றும் பதிலளித்துள்ளனர். இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வருகிறது.

விஜயகாந்த்தின் புதிய கட்சிக்கு 8.9 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுக, திமுக, விஜயகாந்த்தின் கட்சிக்குப் பிறகேபாமக, காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெரும்பாலானவை அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளன. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது, புதியவீராணம் திட்டம், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது, மழை, வெள்ள நிவாரணப் பணிகள், புதிய வீராணம் திட்டம், ஜெயேந்திரர்கைது செய்யப்பட்டது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இருந்த மக்கள் மன நிலையில் இப்போது பெரும் மாற்றம் காணப்படுகிறது. கடந்த முறைஇருந்ததை விட இந்த முறை அதிமுகவுக்கு செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

அடுத்த முதல்வராக யார் தேர்வு பெறுவார்கள் என்ற கேள்விக்கு திறமை அடிப்படையில் கருணாநிதிக்கு 87.46 சதவீதம் பேரும்,வாய்ப்பு அடிப்படையில் 89.18 சதவீதம் பேரும்,

ஜெயலலிதாவுக்கு திறமை அடிப்படையில் 82.99 சதவீதம் பேரும், வாய்ப்பு அடிப்படையில், 78.73 சதவீதம் பேரும்வாக்களித்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தை விஜயகாந்த் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திமுக, அதிமுகவுக்கு சரியான மாற்றுக் கட்சியாக விஜயகாந்த்தின் கட்சி இருக்கும் என்று 33. 2 சதவீதம் பேர் கருத்துதெரிவித்துள்ளார்.

வருகிற தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்க வேண்டும் என்று 25.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.விஜயகாந்த்தின் தாய்மொழி தெலுங்கு என்பதால் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு அது பாதகமாக அமையாது என்றும்கணிசமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறார் என்று பார்த்தால் திமுகவின் வாக்குகளைத்தான் அவர் அதிகம் பிரித்துள்ளதாகதெரிய வந்துள்ளது. அதிமுகவுடன், விஜயகாந்த் கூட்டணி வைத்தால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு மூலம்தெரிய வந்துள்ளது என்றார் ராஜநாயகம்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் இவ்வாறு கூறினாலும், இந்த முடிவுகளை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வது என்பதில் குழப்பம்நிலவுகிறது. காரணம் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 91 சதவீதம் பேர் ஆண்கள், அதிலும் பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து சட்டசபைத் தேர்தல் நிலவரத்தை கணிக்க முடியுமா என்பதுசந்தேகமாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+