அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம்: பின் லேடன்

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ:

அமெரிக்காவின் மீது புதிய தாக்குதல்களுக்கு அல்-கொய்தா தயாராகி வருவதாக பின்லேடன் மிரட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு லேடன் அனுப்பியுள்ள ஆடியோ கேசட்டில்,

அமெரிக்காவின் மீது புதிய தாக்குதலுக்கு எனது போராளிகள் தயாராகி வருகின்றனர். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்அமெரிக்காவின் தாக்குதல் நிற்க வேண்டும். அமெரிக்கர்கள் வில்லியம் பர்ன் எழுதியுள்ள The Rogue State புத்தகத்தைப்படிக்க வேண்டும். படித்தால் உலக நாடுகளில் அமெரிக்கா எப்படி நடந்து கொள்கிறது என்பது நன்றாகப் புரியும்.

தனது போர்களில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இனிமேலும் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும்.அப்படி உறுதியளித்தால் அமெரிககாவுக்கு அமைதி கிடைக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு லேடன் கூறியுள்ளார். இது லேடனின் குரல் தான் என்பதை சிஐஏ உறுதி செய்துள்ளது.

மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவேன் என்று கூறியுள்ள பின் லேடனின் இந்த சமாதான-மிரட்டலை அமெரிக்காநிராகரித்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+