லாரி திருடிய போலீஸ்காரர்!

Subscribe to Oneindia Tamil

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே லாரியைத் திருடிச் சென்ற போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காக்கியே லாரி திருடிய இந்த கேடு கெட்ட செயல் காவல்துறையை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செக்கடி என்ற இடத்தில் சாலையோரம்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை ஒருவன் திடீரென ஸ்டார்ட் செய்து கொண்டுகிளம்பினான்.

அருகே டீ குடித்துக் கொண்டிருந்த லாரியின் டிரைவரும், க்ளீனரும் தங்கள் லாரியையாரோ ஒருவன் ஓட்டிச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

லாரியை விரட்டிக் கொண்டு ஓடினர். ஒரு வழியாக ஓடும் லாரியில் ஜாக்கி சான்ஸ்டைலில் தாவிப் பிடித்து ஏறினர். பின்னர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திரும்த நபரைஅமுக்கிப் பிடித்து லாரியை நிறுத்தினர்.

டிரைவரும் கிளீனருமாக சேர்ந்த அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.பொது மக்களும் சேர்ந்து கொண்டு அவனை பின்னி எடுத்தனர். பின்னர் அந்த நபர்காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

லாரியைத் திருடிய நபர் போலீஸ்காரர் சீனிவாசன் என்றும் விருதுநகர் மாவட்டம்ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்ததும் போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தத் தகவலை வெளியில் கசிய விடாமல் அமுக்க முயன்ற போலீசார், அவரை சுமார்5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

மேலூர் பகுதியில் தொடர்பான செய்திகள்பு நடந்த சில லாரித் திருட்டு சம்பவங்களில்சீனிவாசனுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணைநடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த 3 போலீஸ்காரர்கள் சென்னையில் பிடிபட்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+