சிறுசேரி நில ஊழல்: ஜெ தப்ப முடியாது-ஸ்டாலின்
மதுரை:
டான்சி நில பேர வழக்கில் தப்பியது போல சிறுசேரி நில ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா தப்பவே முடியாது, அந்த அளவுக்குஅந்த மோசடியில் பலமான ஆதாரங்கள் உள்ளன என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
மதுரை அருகே மேலூரில் நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் சலுகைகளை வாரி வழங்கி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் இந்த நாடகத்தைமக்கள் நம்ப மாட்டார்கள்.ஆட்சி முடியப் போகும் தருவாயில் பல திட்டங்களை அறிவிக்கிறார். தினம் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். இதையெல்லாம்முன்பே அறிவித்து இந்நேரம் நிறைவேற்றியே முடித்திருக்கலாமே?. இதெல்லாம் மக்களுக்கும் தெரியும். தேர்தலில் பாடம் புகட்டகாத்திருக்கிறார்கள்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா எப்படியோ தப்பி விட்டார். ஆனால் சிறுசேரி நில ஊழல் விவகாரம் அப்படியல்ல.சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அரசு நிலம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளதில் பல கோடிகள் ஏப்பம் விடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ஜெயலலிதா செய்துள்ள மோசடிகளுக்கு மிக வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கிலிருந்துஅவர் தப்பவே முடியாது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications