நுழைவு தேர்வு ரத்து செய்ய சட்ட மசோதா
சென்னை:
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது, பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக சட்டசபையில் இன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவை மாநில கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
இதில், மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படிக்காத மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:
இதற்கிடையே சட்டமன்றத்தில் இன்று நடந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க் கட்சிகள்அனைத்தும், பாஜக தவிர, கூண்டோடு வெளிநடப்பு செய்தன.
நேற்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று விவாதம் நடந்தது. வழக்கமாக பட்ஜெட்டை எதிர்க் கட்சியினர்படித்துப் பார்த்து விவாதத்தில் ஈடுபட ஒரு நாள் அவசாகம் தரப்படும், ஆனால் இம்முறை பட்ஜெட்டைப் படிக்கவே அவகாசம்தராமல் விவாதம் நடத்தப்படுவதாகக் கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications