மதுரை நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி
மதுரை:
பண மோசடி வழக்கு தொடர்பாக ஜெயலட்சுமியும், ஜெயலட்சுமியை கடத்திய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் மதுரைநீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
ஜெகஜால ஜெயலட்சுமி தமிழக போலீசார் மீது கூறிய புகார்கள் குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர். முடிவில்ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது 4 மோசடி வழக்குகளை மதுரை தலைமை ஜூடிசியல்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் பண மோசடி வழக்கும், ஜெயலட்சுமி குடும்பத்தினரை போலீசார் கடத்தியவழக்கும் மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இப்போது டிஎஸ்பி ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்ஜெயலட்சுமி.
இந் நிலையில் மதுரை நீதிமன்றத்தில் மோசடி மற்றும் கடத்தல் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதற்காக திருச்சி சிறையில்இருந்து ஜெயலட்சுமி பலத்த பாதுகாப்புடன் போலீசார் மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் இளங்கோவனும் நேரில் ஆஜரானார். ஆனால் மலைச்சாமி ஆஜராகவில்லை. இளங்கோவன்,மலைச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்னும் முடியாததால் வழக்கை அடுத்த மாதம் 3ம் தேதிக்குமாஜிஸ்திரேட் அய்யாசாமி தள்ளி வைத்தார்.
இதே போல் ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்தியதாக இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், கோவையை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் முருகவேல் அவரது நண்பர்கள் ரவிசங்கர், சண்முகம்ஆகியோர் மீது சிபிஐ அதே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் ரவிசங்கர், சண்முகம் தவிர மற்றவர்கள் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2ம்தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications