பெங்களுரில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டிய 2 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை போலீசார்கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய அறிவியல் கழகத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியான அப்துல்ரகுமானின் கூட்டாளிகள் என்று சந்தேகப்படும் அப்தார் பாஷா, இர்பான் ஆகிய 2 தீவிரவாதிகளை பெங்களூர் போலீசார் கைதுசெய்தனர்.

இவர்கள் இருவரிடமிருந்தும், 17 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 20 ஜெலட்டின் குச்சிகள், 3 வெடிகுண்டுகள், இரும்புகுண்டுகள், தீவிரவாத இயக்க தொடர்புடைய புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை இவர்கள் கோலார்மாவட்டம் சிந்தாமணியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்க திட்டமிட்டிருந்ததும்அம்பலமாகியுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரில் பாஷா என்ற தீவிரவாதி கடந்த 2003ம் ஆண்டு டாக்காவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு:

இதற்கிடையே குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். பயணிகள் மற்றும்அவர்களது உடமைகள் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. வரும் 31ம் தேதி வரை விமான நிலையத்திற்குள்பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+