ஓசூர் அருகே பஸ்சில் வழிப்பறி செய்த வாலிபர் கைது
ஓசூர்:
ஓசூர் அருகே பஸ்சை கடத்தி கொள்ளையில் ஈடுபட்ட பெங்களூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. காரேப்பாளையம் அருகே அந்த பஸ் அதிகாலை வந்துகொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அதில் ஏறினர். பஸ் புறப்பட்டதும் 3 பேரில் ஒருவன் கத்தி முனையில்நடத்துனரை மிரட்டி அவர் கையில் இருந்த பணப்பையை பறித்துள்ளான்.அந்த பணப்பையில் ரூ. 2,000 பணம் இருந்தது. கண்டக்டரிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டான். இன்னொருவாலிபர் டிரைவரை கத்தி முனையில் மிரட்டி தான் சொல்லும் வழியில் வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளான்.
இதற்குள் இன்னொரு வாலிபர் பயணிகளை மிரட்டி நகைகளை கழட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளான். ஆனால் அவர்கள்நகைகளை கழட்டி கொடுக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே பஸ் தமிழக எல்லையை கடந்து விட்டது.
இதனால் கொள்ளையர் 3 பேரும் பஸ்சை மெதுவாக ஓட்டச் சொல்லி, குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்தகொள்ளையர்களில் ஒருவனை மட்டும் பயணிகள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில்ஓப்படைத்தனர்.
கண்டக்டக்ரிடம் பணப்பையை பறித்து பிடிபட்ட அந்த வாலிபரின் பெயர் ரபீக் (வயது 20) ஆகும். மேலும் தலைமறைவான 2வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications