மிடாஸ் இயக்குநர்கள் யார்? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி
மதுரை:
மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையின் இயக்குநர்களில் பெரும்பாலனவர்களுக்கும், சசிகலாவுக்கும் என்ன தொடர்பு, உறவுஎன்பதை முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மிடாஸ் மதுபானத் தொழிற்சாலைக்கும், தனக்கும், தோழி சசிகலாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். என் மீது அவதூறு வழக்குத் தொடரப் போவதாகவும் அவர்கூறியுள்ளார்.நான் அவரிடம் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே கேள்வி தான். மதுபானத் தொழிற்சாலையில் உள்ள இயக்குநர்கள் பலருக்கும்,சசிகலாவுக்கும் என்ன தொடர்பு என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும். சோதனை நடத்தப்பட்ட மதுபானத்தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் மட்டுமல்ல,டி.டி.வி.தினகரின் சகலையும் ஆவார்.
அதே போல மற்ற இயக்குநர்களான கிட்டப்பா, குலோத்துங்கன், கார்த்திகேயன், ராமச்சந்திரன் ஆகியோரும் சசிகலாவின்உறவினர்கள் தான். இதை ஜெயலலிதா மறுக்க முடியுமா? இதே போல ரெய்டுக்கு உள்ளான ஆடிட்டர் நடராஜன்,
மதுரை செரினா கஞ்சா வழக்கில் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர். இப்போது அவரது வீட்டில் சோதனைநடத்தப்பட்டவுடன், அவர் உலகப் புகழ் பெற்ற ஆடிட்டர் என்று ஜெயலலிதா அலறுவது ஏன் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications