கர்நாடக எம்.எல்.ஏக்கள் கொடைக்கானலுக்குப் பயணம்
மதுரை:
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது அடுத்த கட்ட பயணமாககொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து தரம்சிங் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.குமாரசாமியும், பாஜகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளன. இதையடுத்து வருகிற 27ம் தேதிசட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு தரம்சிங்குக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து குதிரை பேரத்தைத் தவிர்க்கவும், எம்.எல்.ஏக்கள் கடத்தப்படுவதைத் தவிர்க்கவும் பாஜக எம்.எல்.ஏக்கள் 75பேர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னை வந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொரு ஊராக தற்போது சுற்றுலா சென்றுவருகின்றனர்.
முதலில் மகாபலிபுரம் போன அவர்கள் அங்குள்ள குடவரைக் கோயில்கள், கடற்கரைக் கோவில், சிற்பங்களைப் பார்த்துரசித்தனர். இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து இன்று காலை 3 சொகுசுப் பேருந்துகள் மூலம் அவர்கள் திருச்சி, மதுரைவழியாக கொடைக்கானலுக்கு கிளம்பினர்.
பாஜக குழுவின் தலைவர் கட்டா சுப்ரமணியம் நாயுடு இதுகுறித்துக் கூறுகையில், மகாபலிபுரம் சென்று கோவில்களைப்பார்த்தோம். அடுத்து திருச்சி, மதுரை செல்கிறோம். பின்னர் மாலையில் கொடைக்கானலுக்குப் போகிறோம். சட்டசபையில்தரம்சிங் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள 27ம் தேதி தான் பெங்களுருக்குத் திரும்புவோம் என்றார்.
கர்நாடக பாஜக குழுவினருடன் தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு செல்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications