ஜெ. வீட்டில் ரெய்டு நடத்த 1 வருடமாக திட்டம்: திடுக் தகவல்கள்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடத்த கடந்த ஒரு வருடமாக திட்டம் தீட்டப்பட்டு வந்ததாகதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டசபையில் பேசுகையில் தனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்த திமுக சதி செய்துவருவதாகவும், இதற்காக சென்னையில் உள்ள வருமான வரி அதிகாரிகளை, திமுகவைச் சேர்ந்த மத்திய திமுக நிதித்துறைஇணை அமைச்சர் பழனிமாணிக்கம் நிர்பந்தம் செய்து வருவதாகவும் புகார் கூறினார்.இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையில் 3 நாட்களுக்கு வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மிடாஸ் நிறுவனத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் சந்தோஷ் தத்தா தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ் நாளிதழான தினமலர் ரெய்டுகள் குறித்த பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ்கூட்டணி அரசு பதவிக்கு வந்ததுமே, திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாக ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தும்திட்டம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, சென்னை மண்டல வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரலாக ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டார். இணை இயக்குநராகஅய்யர் என்பவரும், தலைமை ஆணையராக பினாய் குப்தாவும் நியமிக்கப்பட்டனர்.
இவர்களிடம் ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அவ்வாறு சோதனை நடத்தினால் பல பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்படும் என்பதால் இந்த மூன்று அதிகாரிகளுமேஉடன்பட மறுத்துள்ளனர்.
இதையடுத்து ஸ்ரீதரனும், அய்யரும் வெளி மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர். பினய் குப்தா பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர்களைத் தொடர்ந்து விஜயக்குமார் என்ற அதிகாரியும் கொல்கத்தாவுக்குஇடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தங்களுக்கு சாதகமான இயக்குநர் ஜெனரலைக் கொண்டு வர திட்டமிட்ட மேலிடம், மதுரையைச் சேர்ந்தஅதிகாரியின் சீனியாரிட்டியைப் புறக்கணித்து விட்டு பெங்களூரிலிருந்து சந்தோஷ் தத்தாவை (தற்போது உள்ளவர்) இயக்குநர்ஜெனரலாக நியமித்தனர்.
சந்தோஷ் தத்தாவிடம் ரெய்டு நடத்துவதற்கான உத்தரவுகள் சென்ற போது, ஜெயலலிதாவின் வீட்டில் ரெய்டு நடத்தினால்பிரச்சினை வரும் என்று அவரும் கூறியுள்ளார். அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள்,அலுவலகங்களில் சோதனை நடத்தி ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டதாம்.
இதைத் தொடர்ந்து மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையில் ரெய்டு நடந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும்டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் என்பதும், நிறுவனத்தின் ஆடிட்டர் நடராஜன் தான், ஜெயலலிதாவுக்கும்ஆடிட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோதனை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள், ஒரு சிலரே தமிழகஅதிகாரிகள் என்பதும் இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்குறித்து இதுவரை வருமான வரித்துறை விரிவாக விளக்கவில்லை.
இந்த ஆவணங்களை துருப்புச் சீட்டாக வைத்துத்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும்நெருக்கடி கொடுக்கப் போகிறார்கள் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையில் ரெய்டு நடத்திஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தும் அதை ஜெயலலிதா தனக்கு சாதகமாக திசை திருப்பி விட்டதாக எதிர் தரப்புகடுப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இந்தத் தொழிற்சாலையில் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை என்றுவருமான வரித்துறை பகிரங்கமாக அறிவித்துள்ளதும், திமுக தரப்புக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
மிடாஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையை நியாயப்படுத்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர்கருணாநிதி பேசினார். மேலும், இந்தத் தொழிற்சாலையில், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தொடர்பு இருப்பதால் தான்சோதனை நடந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் மிடாஸ் நிறுவனத்துக்கும்,ஜெயலலிதா, சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை என்று வருமான வரித்துறை கூறியிருப்பதுதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தன் மீது அவதூறாகப் பேசிய கருணாநிதி மீது அவதூறு வழக்குகள்தொடரப்படும் என ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளதும் இங்கே நினைவு கூறத்ததக்கது.
அதிமுகவுக்கு எதிராக எந்த பெரிய விஷயம் இல்லாத நிலையில், வருமான வரி ரெய்டை பயன்படுத்தி தங்களது தரப்பைபலப்படுத்திக் கொள்ள நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த சொதப்பல் ரெய்டு விவகாரம் பெரும் பின்னடைவு என்று அரசியல்வட்டாரத்தில் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications