தமிழகம் முழுவதும் கடும் பனி மூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை :
சென்னையில் தெதாடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் நிலவியதால் விமான போக்குவரத்து முற்பகல் வரைபாதிக்கப்பட்டது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் கடும் பனி நிலவி வருகிறது. சென்னையில்ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குரவத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இந் நிலையில் இன்றும் பனிமூட்டம் அதிகம் இருந்தது. இதனால் காலை 8 மணி வரை விமானங்களை இயக்குவதில் பெரும்சிரமம் ஏற்பட்டது. பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். பல விமானங்கள் மிகவும் தாமதமாக கிளம்பிச் சென்றன.
இதேபோல, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும்குளிரும், பனியும் நிலவியது. இதனால் காலை 9 மணி வரை சாலையில் செல்லும் வாகனங்களை சரிவரப் பார்க்க முடியாமல்வாகனதாரர்கள் சிரமப்பட்டனர்.
கொடைக்கானலிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பனிமூட்டமும், குளிரும் காணப்பட்டது. ஊட்டியில் பிற்பகல் 11 மணிவரை வெயில் அடிக்கவில்லை. மாறாக உறைபனி கொட்டியதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications