கருணாநிதியை கேலி செய்வதா? ஆற்காடு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுனரை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தது வேறு விஷயத்திற்காக. இந்த சந்திப்பை முதல்வர் ஜெயலலிதா கேலிசெய்து பேசுவது கண்டனத்துக்குரியது என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கருணாநிதி கேபிள் டிவி சட்ட மசோதா தொடர்பாகஆளுனரை சந்திக்கவில்லை. வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்களை சந்தித்து ரொம்ப நாட்களாகிறது என்றுஆளுனரிடம் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

எனவே அவரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காகத்தான் ஆளுனர் மாளிகைக்கு கருணாநிதி சென்றிருந்தார். ஆனால்கள்ளத்தனமாக சென்றார், திருட்டுத்தனமாக சந்தித்தார் என்று கேவலமாக பேசுகிறார் ஜெயலலிதா. இது கடும்கண்டனத்துக்குரியது.

கேபிள் டிவி சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் மூத்த தலைவரை இவ்வளவுகேவலமாக விமர்சிப்பதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.

சலனம் இல்லை: ராஜ. கண்ணப்பன்

இந் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் ராஜ கண்ணப்பன்,

சட்டசபைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி வருகிறோம். பிப்ரவரி 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னைராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

எந்தத் தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, அதிக ஓட்டுக்கள் உள்ள தொகுதிகள் எது, கூட்டணி வெற்றி குறித்துவிவாதிக்கப்படும்.

தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதைக்கு நாங்கள் எதுவும் பேசப் போவதில்லை. தேர்தல் நெருங்கும்போது திமுகவுடன்அதுகுறித்துப் பேசுவோம். திமுக கூட்டணியில் நாங்கள் நீடிப்பதில் எந்த சலனமும் இல்லை.

சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகள் மட்டுமே இருக்கும். 3வது அணிக்கு வாய்ப்பே இல்லை என்றார் ராஜகண்ணப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+