பிரபாகரனை சந்திக்கும் நார்வே தூதர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் இன்றுஇலங்கை வந்தார்.

இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்யும் முயற்சிகளை அவர் மேற்கொள்ளவுள்ளார். அதே போலஅமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்னும் இலங்கை வருகிறார். அவர் எரிக் சோல்ஹைமுடனும்இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

அதே போல எரிக் சோல்ஹைமுடன் பேச்சு நடத்த புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் இன்று காலைஇலங்கை வந்தார். கொழும்பில் இருந்து இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் அவர் கிளிநொச்சி வந்து சேர்ந்தார். அவருடன்நார்வே தூதரக அதிகாரி ஒட்டார் லேக்ரைட் மற்றும் இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர்ஹெலனும் வந்தனர்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எரிக் சோல்ஹைம் பேச்சு நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்துசெய்தியாளர்களை சந்திக்கும் ஆண்டன் பாலசிங்கம், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் நிலை குறித்துவிளக்கமளிக்கவுள்ளார்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கண்ணி வெடிக்கு 3 ராணுவத்தினர் பலியாயினர். மட்டக்களப்புக்குஅருகே இச் சம்பவம் நடந்தது.

இந் நிலையில் புலிகளின் அமைதிச் செயகத்தின் தலைவர் புலித்தேவன் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

தமிழர்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் முயற்சிகளில் அதிபர் ராஜபக்ஷே ஈடுபட்டுள்ளார். கடந்த காலங்களைப் போலவேஇப்போதும் இந்த முயற்சி வெற்றி பெறாது. இலங்கை அரசும், சிங்களர்களும் தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்தால்,தமிழர்களது உரிமையை அடக்குமுறை மூலம் அபகரித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.

மீண்டும் போரைச் சந்திக்க எங்கள் மக்கள் தயாராகி வருகிறார்கள் என்றார்.

பேச்சுவார்த்தையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடத்த வேண்டும் என்றும் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால்,இதை இலங்கை அரசு ஏற்க மறுத்து வருகிறது.

மேலும் 33 அகதிகள் தமிழகம் வருகை

இந் நிலையில் இலங்கையிலிருந்து மேலும் 33 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் 5 பேர் விமானம் மூலம் சென்னைக்குவந்துள்ளனர்.

இலங்கையில் போர் அபாயம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம்வரத் தொடங்கியுள்ளனர். தினசரி அகதிகள் வருகை இருப்பதால் தனுஷ்கோடி பகுதியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் இலங்கையிலிருந்து விமானம் மூலம் ஐந்து தமிழ் அகதிகள் செனனைக்கு வந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆவர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பின்னர் ஐவரையும்மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல மேலும் 28 பேர் இன்று படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்பின்னர் அனைவரையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களையும் சேர்த்து இதுவரை 142 அகதிகள் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.

படகு மூலம் தமிழகத்துக்கு வரும் அகதிகள் ராமேஸ்வரத்தையடுத்துள்ள ஏதாவது தீவுத் திட்டில் இலங்கை மீனவர்களால்இறக்கிவிடப்படுகின்றனர். அங்கு இவர்கள் பசி, பட்டினியோடு காத்துக் கிடக்கின்றனர்.

இவர்களை அடையாளம் காணும் தமிழக மீனவர்கள், ஏதாவது உணவைத் தந்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் தருகின்றனர்.பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று இவர்களை மீட்டு வருகின்றனர்.

சிலர் நாட்கணக்கில் கூட தண்ணீர், உணவு இல்லாமல் தீவுத் திட்டுகளில் திறந்த வெளியில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+