மாட்டுத் தொழுவத்தில் முன்னாள் காங். எம்.எல்.ஏ ரூ 5 லட்சம் நிதி, வீடு வழங்கி ஜெ. உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் மாட்டுத் தொழுவத்தில் வசித்து வரும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணவேணிக்குரூ. 5 லட்சம் நிதியுதவியும், அரசு வீட்டையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், ஆண்டிப்பட்டிதொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கிருஷ்ணவேணி கடும் வறுமையில் வாடி வருகிறார். வசிக்க வீடு கூட இல்லாதநிலையில் மாட்டுத் தொழுவத்தில் வசித்து வருகிறார். அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார். இந்தக் கோரிக்கையைஏற்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா இன்று சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாட்டுக்காக உழைப்போருக்கு உரியமதிப்பை நான் வழங்கி வருகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் போராடிய, இந்திய தேசிய ராணுவத்தில்முக்கியப் பங்கு வகித்தவருமான சரஸ்வதி என்ற ராஜாமணி அம்மையாரின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்கு ரூ. 5லட்சம்,வீடு ஆகியவற்றை வழங்கினேன்.

இதே போல, காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான தேனாம்பேட்டை காங்கிரஸ்மைதானத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து, காங்கிரஸ் கட்சியினரால் வெளியே துரத்தப்பட்ட ராஜு பிள்ளைக்கும்உதவிகள் செய்தேன்.

90 வயதான அந்தப் பெரியவர் எனது அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.

இப்படிக் கட்சி மாச்சரியமின்றி தகுதி உடைய அனைவருக்கும் எனது அரசு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது.

நேற்று சபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கிருஷ்ணவேணி கடும் வறுமையில் வாடி வருவதாக தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட கிருஷ்ணவேணி அம்மாள், கடந்த 1962ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்.எல்.ஏவாகஇருந்துள்ளார். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தில் வசித்து வருகிறார்.

ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அவர், அந்தக் காலத்தில் பல்வேறு ஏச்சுப் பேச்சுக்கள், கடும் எதிர்ப்புகளை மீறி சட்டசபைஉறுப்பினராக தேர்வு பெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அவர் தற்போது எம்.எல்.ஏ. ஒய்வூதியமாக மாதந்தோறும் ரூ. 6000 பெற்று வருகிறார். ஆனால் அந்தத் தொகை கடனைஅடைக்கவே சரியாக இருப்பதால், தங்குவதற்கு வீடு இல்லாமல் மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் பரிதாப நிலையில் உள்ளார்.

44 ஆண்டுகளுக்கு முன்பு பெண்மையின் பிரதிநிதியாக, தாழ்த்ப்பட்ட மகளிரின் பிரதிநிதியாக இருந்த கிருஷ்ணவேணிக்குஉரிய மரியாதை வழங்க வேண்டியது எனது அரசின் கடமையாகும்.

எனவே அவருக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் வைப்பு நிதியாக இது வைக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மாதா மாதம்ஆட்சித் தலைவரால் கிருஷ்ணவேணியிடம் சேர்க்கப்படும்.

அதே போல கிருஷ்ணவேணி தங்குவதற்காக தேனி, அரண்மனைப்புதூரில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பில், வாடகைஏதுமின்றி ஒரு வீடு அவருக்கு வழங்கப்படும். அவரது வாழ்நாள் முழுவதும் இந்த வீட்டில் அவர் வசிக்கலாம் என்றுதெரிவித்தார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+