ஆபாச படம்: சும்மா விட மாட்டேன்: குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kushboo
எனது முகத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆபாசமாக புகைப்படம் வெளியிட்டுள்ள மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையை சும்மா விடமாட்டேன். மான நஷ்ட ஈடு வழக்கு கண்டிப்பாக தொடரப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை ஒருமையில் அழைத்தும், 500 ரூபாய் கூட இல்லாத நீயெல்லாம் ஒரு டைரக்டராஎன்று கோபத்துடன் கேட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் குஷ்பு.

இந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே அவர் ஒரு பெரிய இம்சையில் சிக்கிக் கொண்டார். பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசப் போகதமிழகமே குஷ்புவை தாளித்துத் தள்ளி விட்டது. கோவில் கட்டி கும்பிட்ட ரசிகர்கள் ஊர் ஊராக அவரது உருவபொம்மையைகொளுத்தினர்.

ஒரு வழியாக இந்தப் பிரச்சினை இப்போது தான் ஒய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் குஷ்பு. லண்டனைமையமாகக் கொண்ட மேக்ஸிம் என்ற ஆண்களுக்கான இதழில், குஷ்புவின் நீச்சல் உடைப் படம் வெளியாகி பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இது குஷ்புவின் படம் அல்ல, குஷ்புவின் முகத்தை, வேறு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் உடலோடு இணைத்து கிராபிக்ஸ்மூலம் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக குஷ்புவும், அவரது கணவர் சுந்தர்.சியும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தனது புகைப்படத்தை தவறான முறையிலும் கேவலமாகவும், ஆபாசமாகவும் பயன்படுத்தியதற்காக மேக்ஸிம் பத்திரிக்கை மீது மான நஷ்டஈடு வழக்கு தொடரப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

Kushboo
இந்தப் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், நான் திருமணமான பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்கென்று பல பொறுப்புகள்உள்ளன. இப்போது தான் ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

இந்த நிலையில் எனது முகத்தை தவறாகப் பயன்படுத்தி ஆபாசமான ஒரு படத்தை மேக்ஸிம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது எனதுமனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. எனது பெயரை கேவலப்படுத்தி விட்டார்கள்.

சம்பந்தப்பட்ட பத்திரிக்கையிலிருந்து என்னிடம் பேசினார்கள். மன்னிப்பு கேட்பதாகவும், அதுதொடர்பான மன்னிப்பை அடுத்த இதழில்வெளியிடுதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அதை நான் ஏற்கப் போவதில்லை. பொதுமக்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான கருத்தை பரப்பும் வகையில் இந்தபுகைப்படம் வெளியிட்டுள்ளது. இதை நான் சும்மா விடப் போவதில்லை. மேக்ஸிம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்.மேற்கொண்டு வேறு சில நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார் குஷ்பு.

குஷ்புவுக்கு ஆனாலும் நேரம் ரொம்ப தான் மோசமாக உள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+